துவக்க வீரராகவும் களமிறங்க நான் தயார்; விரக்திமான் சஹா !!

துவக்க வீரராகவும் களமிறங்க நான் தயார்; விரக்திமான் சஹா

ஐ.பி.எல் டி.20 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரராக களமிறங்கவும் தான் தயாராக உள்ளதாக சீனியர் வீரர் விரக்திமான் சஹா தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டவர் விருத்திமான் சகா. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் ஐபிஎல் தொடரில் விளையாடினார். அப்போது கைவிரலில் காயம் ஏற்பட்டது. தோள்பட்டை காயம் மற்றும் கைவிரல் காயத்தால் சுமார் ஒரு வருடம் அவரால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விட்டார். இதனால் சகாவிற்கு மீண்டும் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்த சகா, சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் களம் இறங்கினார். ஒரு ஆட்டத்தில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.

ஐபிஎல் 2019 சீசன் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. சகா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட ஆசை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். ஆனால், இந்த முடிவு அணி நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டியது.

பல மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளேன். இந்த ஐபிஎல் எனக்கு குறிப்பிடத்தகுந்ததாகும்’’ என்றார்.

தயாரான தல தோனி;

ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 16) முதல் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடிந்ததை அடுத்து, எஞ்சியுள்ள சென்னை அணியின் வீரர்கள் சொந்த வீடு திரும்பி வருகின்றனர்.

சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கேதர் ஜாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “மூன்று சிங்கங்கள்… சென்னைக்கு புறப்பட்டுள்ளன, நம்ம தல-க்கு வணக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Mohamed:

This website uses cookies.