தோனியின் தற்போதைய உடல் நிலை குறித்தும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆடுவாரா என்பது குறித்தும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அப்டேட் செய்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பும் நடந்துகொண்டு இருக்கையிலும் பல வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்தும் பல போட்டிககளில் இருந்தும் வெளியில் அமர்த்தப்பட்டனர். குறிப்பாக, கொல்கத்தா அணியின் இளம் வேகபந்துவீச்சாளர்கள் நகர்கோட்டி, சிவம் மாவி ஆகியோர் காயத்தினால் ஆடவில்லை.
டெல்லி அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்சல் படேல் வெளியேறினார். பெங்களூரு அணிக்கு நடுவில் இணைந்த ஸ்டெயின் 3 போட்டிகள் மட்டுமே ஆடி வெளியேறினார்.
சென்னை அணிக்கு ஆடி வந்த பிராவோ, நடுவில் காயமடைந்து 15 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்ட பின் அணியில் இணைந்தார். தற்போது தோனி முதுகு வலியின் காரணமாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. பின்னர் ஒரு வாரம் உடல்நல குறைவால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆடவில்லை.
ஏற்கனவே சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும், முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்பதால் அணிக்கு தோனி கட்டாயம் தேவை. மேலும், உலகக்கோப்பை தொடரிலும் இவரின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதால் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக முழுமையாக குணமடைவது முக்கியம்.
இந்நிலையில், சென்னை அணி அடுத்த போட்டியில் டெல்லி அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர் கொள்கிறது. இந்த போட்டியில் தோனி ஆடுவாரா என்பது குறித்து அணியின் தலைமை பயிர்சியாளர் ஸ்டிபன் பிளெமிங் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, தோனி தற்போது குணமடைந்து பயிற்சியில் ஈடுபடுகிறார். முழு குணமடைவது குறித்து அணியின் மருத்துவர் பரிசோதித்து வருகிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக தான் கூறமுடியும் என்று தெரிவித்தார்.