ஐ.பி.எல் முதல் வாரத்தில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் ஸ்டீவ் ஸ்மித், வார்னர்
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஐ.பி.எல் தொடரின் முதல் வாரத்திற்கு பிறகே தங்களது அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்காலம் அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும டேவிட் வார்னர் ஆகியோரின் தடைக்காலம் வரும் 28ம் தேதியோடு முடிவடைகிறது.
இந்திய அணியுடனான தொடரை முடித்துள்ள ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடரில் 4வது போட்டி மார்ச் 29ம் தேதி நடைபெறுகிறது. எனவே 4வது மற்றும் 5வது போட்டியில் ஸ்மித்தும், டேவிட்டும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இந்நிலையில் உலகக்கோப்பைக்கு முன்னர் துபாயில் ஒரு கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும், அதில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்துக்கொள்வார்கள் என்றும் அந்தஅணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல், ஐ.பி.எல் தொடரின் முதல் வாரத்தில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தகவல்கள் தெர்விக்கின்றன.
மார்ச் 23ம் தேதி துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரில் முதல் 7 நாட்களுக்கு பிறகே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது அணிகளில் இணைவார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதனால் முதல் வாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரஹானே கேப்டனாக வழிநடத்துவார் என தெரிகிறது. ஸ்டீஸ் ஸ்மித் அணியில் இணைந்தபிறகு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
அதே வேளையில் டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுவாரா இல்லை,கடந்த தொடரில் ஹைதராபாத் அணியை சிறப்பாக வழிநடத்திய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனே இந்த தொடரிலும் வழிநடத்துவாரா என்பது குறித்து பின்னரே தெரியவரும்.