தன்னை சீண்டிய யுஸ்வேந்திர சாஹலுக்கு சரியான பதிலடி கொடுத்த ஸ்டூவர்ட் பிராட்  !!

தன்னை சீண்டிய யுஸ்வேந்திர சாஹலுக்கு சரியான பதிலடி கொடுத்த ஸ்டூவர்ட் பிராட்

தன்னை கிண்டலடித்த சாஹலை இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடும் பதிலுக்கு கலாய்த்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் மும்பை அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த சீசனில் முதன்முதலில் ஆடும் யுவராஜ் சிங், சாஹலின் பந்தில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். யுவராஜ் சிங் அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்த காலத்தில் அதிகபட்ச விலைக்கு ஐபிஎல்லில் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் பஞ்சாப் அணியால் கழட்டிவிடப்பட்ட யுவராஜ் சிங்கை இந்த சீசனில் அவரது அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜ் சிங்கின் அடிப்படை விலையான ஒரு கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனில் சரியாக ஆடாத யுவராஜ் சிங், இந்த சீசனை நன்றாகவே தொடங்கியுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். ஆனால் அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பழைய யுவராஜ் சிங்கை நினைவூட்டும் வகையில் ஆடினார். சாஹல் வீசிய 14வது ஓவரில் முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்கள் விளாசினார். அப்போது ஆர்சிபி அணி அரண்டு நின்றது. ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்ததை அடுத்து, யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த அடுத்த பந்தில் யுவி அவுட்டானார்.

போட்டிக்கு பின்னர் யுவராஜ் சிங் அடித்தது குறித்து பேசிய சாஹல், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், யுவராஜ் முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்ததும், எனக்கும் ஸ்டூவர்ட் பிராடின் நிலைதானோ என்று நினைத்தேன். ஆனால் அடுத்த பந்தை கண்டிப்பாக சிறப்பாக வீச வேண்டும் என்ற உறுதியுடன் வீசினே என்று சாஹல் தெரிவித்துள்ளார்.

2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார் யுவராஜ் சிங். அந்த சம்பவம்தான் தனக்கு நினைவுக்கு வந்ததாக சாஹல் தெரிவித்தார்.

இந்நிலையில் தன்னை கிண்டலடிக்கும் வகையில் பேசிய சாஹலுக்கு, ஸ்டூவர்ட் பிராட் அதே கிண்டல் பாணியிலியே பதிலடி கொடுத்துள்ளார்.

 

 

Mohamed:

This website uses cookies.