இந்திய பிரீமியர் லீகின் பன்னிரண்டாவது பதிப்புக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மிகப்பெரிய ஊக்கத்தை பெற்றுள்ளது. போட்டியின் துவக்கத்திலிருந்து வலதுகை ஆட்டக்காரர் கேன் வில்லியம்சன் சரியாக விளையாட உள்ளார். இந்த மாத தொடக்கத்தில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோள்பட்டை காயம் ஏற்பட்டதால் போட்டியின் தொடக்கத்தில் வில்லியம்சனின் பங்கு பற்றிய பெரும் சந்தேகங்கள் ஏற்பட்டன.
வில்லியம்சன் விளையாட்டின் போது காயம் அடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது. வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய போது அவர் இடது தோள்பட்டை காயமடைந்தார். இருப்பினும், அவர் பேட்டிங் செய்ய வந்தார், ஆனால் இருமுறை ஃபிஷியோவை அழைத்து பரிசோதித்து பின்னர் ஆடினார். அப்பொழுது அவரின் ஆட்டங்கள் இயல்பாக இல்லை. அவர் வெளியே வந்தவுடன், அவர் ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு விரைந்தார். வில்லியம்சன் தனது இடது பக்க தோள்பட்டையில் தசைகள் பலமாக விரிவு பெற்றிருந்தன, அதாவது, கிழிந்திருந்தன என ஸ்கேன்கள் வெளிப்படுத்தின.
ஆனால், விரைவாக குணமடைந்து, வில்லியம்சன் இப்போது தொடக்கத்தில் இருந்து ஆடவும் தகுதி பெற்றுள்ளார். வில்லியம்சன் கடைசி பருவத்தில் பேட்டிங் மற்றும் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். தொடரில் அதிக ரன்களைப் அடித்திருந்தார் மற்றும் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இல்லாத நிலையில் அணியை இறுதிக்கு செல்வதற்கும் வழிவகுத்தார்.
ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 22 அன்று வில்லியம்சன் மற்றும் அவரது துணையான மார்ட்டின் குப்டில் இருவருடன் சந்திப்போம் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் ட்விட்டர் பதிவில் தெரிவித்தது.