ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019ஆம் ஆண்டு தொடரை துவங்குவதற்கு முன்பாகவே மிகப்பெரிய அடியாக அணியின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக வெளியேறினார். இதற்கிடையில், சென்ற ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். எனினும், இலங்கைக்கு எதிராக ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஒரு அசாதாரண காயம் அவரது வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
ஐசிசி உலகக் கோப்பைக்கு முன்னதாக வேக பந்து வீச்சாளர் தன்னை சீரமைக்க குறைந்தது நான்கு வாரங்கள் தேவைப்படும். இங்கிலாந்தின் பந்துவீச்சாளர் டேவிட் வில்லே அவரது இடத்தை நிரப்ப காத்திருக்கிறார். இந்திய பந்துவீச்சு தாக்குதலில் சர்துல் தாகூர், மோஹித் சர்மா, தீபக் சஹார் மற்றும் கே.எம். ஆசிப் ஆகியோர்சென்னை அணியில் இருக்கின்றனர்.
இருப்பினும், லுங்கி இங்கிடி இடத்தை நிரப்ப சாத்தியமாக இருக்க கூடிய 3 வீரர்களை காண்போம்.
#1 டாக் பிராஸ்வெல்
28 வயது வீரர் இந்தாண்டு நல்ல நிலையில் உள்ளார். இவர் இலங்கைக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபித்து கொண்டார்.டாக் பிரசெவெல் 44 ரன்களைக் குவித்தார், மேலும் ஒரு விக்கெட் எடுத்தார். டெல்லி கேபிட்டல்ஸ் அவர் ஒரு தனித்துவமான ஆட்டத்தை விளையாடியுள்ளார். ஒன்பது பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். பந்தைக் கொண்டு, அவர் திறமையைக்காட்டி 3/32 என ஆட்டத்தை முடித்தார்.
அவர் 142.42 என்ற ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார். அவர் 55 இன்னிங்சில் 62 விக்கெட்டுகளை 22.33 சராசரியில் எடுத்துள்ளார். கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீச கூடியவர்.
இவர் தொடர் முழுவதும் இருப்பார் இது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.