தட்டு தடுமாறி 131 ரன்கள் குவித்த சென்னை; கலக்கத்தில் ரசிகர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 56 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நேற்றோடு முடிவடைந்த நிலையில், சென்னை, மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் முதல் குவாலிபையர் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயூடு 42, தோனி 37 மற்றும் முரளி விஜய் 26 ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு செயல்படாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விகெட்டுகளை இழந்த சென்னை அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
பந்துவீச்சிற்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமானது என்பதால் 130 ரன்களே வெற்றிக்கு போதுமானது தான் என்றாலும் சென்னை ரசிகர்கள் ஒருவித பயட்துடனே உள்ளதை சமூக வலைதளங்கள் மூலமாக பார்க்க முடிகிறது.
அதில் சில;