வீடியோ; சஹாவை மான்காட் செய்ய நினைத்து அம்பயரிடம் வாங்கி கட்டிய அஸ்வின்
ஹைதராபாத் அணியுடனான இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் சஹாவை மான்காட் முறை அஸ்வின் அவுட்டாக்க நினைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டி இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏனென்றால், இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் தலா 11 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளை வென்றுள்ளன. எனவே இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ஹைதராபாத் அணியில் அபிஷேக், நபி மற்றும் சந்தீப் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வழக்கம் போல டேவிட் வார்னர் மற்றும் விரக்திமான் சஹா ஆகியோர் சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
போட்டியின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடிய இருவரின் விக்கெட்டை இழக்க பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், தனது தந்திரமான முறையை கையில் எடுக்க முடிவு செய்ததை போல் சஹாவை ஒரே ஓவரில் இரண்டு முறை மான்காட் செய்ய அஸ்வின் முயற்சித்தார், ஆனால் சஹா க்ரீஸை விட்டு வெளியேறாததால் ஏமாற்றம் அடைந்தார் அஸ்வின். இதனால் கடுப்பான அம்பயரும் அஸ்வினை எச்சரித்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.