ஐபிஎல் தொடரின் மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது இந்த ஏலத்தின் முதல் நாளில் இவர் ஆட்சியில் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது நாளாக மும்பை இந்தியன்ஸ் அணி யுவராஜ் சிங்கை அவரது அடிப்படையான இரண்டு கோடிக்கு எடுத்தது .
இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கூறியதாவது..
ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு இன்னும் பல கோடிகள் கொடுத்து இருக்க வேண்டும்
அவர் அற்புதமான ஆட்டக்காரர். அவர் இன்னும் பல கோடிகள் கொடுக்கப்பட வேண்டிய வீரர் என்று கூறினார் கவுதம் கம்பீர்.
அந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியில் ஜாம்பவானாக, வெற்றி வீரராக, சிக்சர் மன்னராக திகழ்ந்த ஒருவருக்கு மரியாதை இல்லை என்றால் எப்படி இருக்கும்? அதுவும் ஐபிஎல் தொடரில் பணமே தரவில்லை என்றால் கொதிக்க மாட்டீர்கள்?
அப்படி ஒரு கொதிநிலைக்கு போயிருக்கிறார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். அவர் பொங்கியது அவருக்காக அல்ல… யுவி என்று அன்போட அனைவராலும் அழைக்கப்படும் யுவராஜ் சிங்குக்காக தான்.
2000ம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக ஆடி வரும் யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2011ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் அவர்.
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசியவர் என்ற அரிய சாதனையை படைத்த யுவி, 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமானார். இந்திய கிரிக்கெட்டில் பெரும் பங்காற்றிய அவர், 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசியாக ஆடினார். பின்னர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
அதிரடி மன்னனாக, ஜாம்பவனாக திகழ்ந்த அவரை ஐபிஎல் ஏலத்தில் கைப்பற்ற போட்டா போட்டி நடக்கும். ஆனால்… நிலைமையோ இப்போது மாறியிருக்கிறது. நடப்பு சீசனில் அடிப்படை விலைக்குக்கூட எடுக்க எந்த அணியும் வரவில்லை.