ரிஷப் பண்டிற்கு டீச்சரான தல தோனியின் மகள்; வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்க்கு தோனியின் மகள் தமிழ் சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 12வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் சென்னை அணி, கேப்டன் தோனியின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். மைதானத்தில் பார்க்கும் இடமெல்லாம் மஞ்சள் வண்ணமாக காட்சி அளித்தது.
இந்த ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே தோனிக்கும், ரிஷப் பண்ட்க்கும் இடையே ஒருவித போட்டி நிலவி வந்தது. ரிஷப் பண்ட்க்கும் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடினார். தோனியும் பேட்டிங்கில் சென்னை அணிக்காக தனித்து பல போட்டிகளில் அசத்தினார். இருப்பினும், அனுபவ ரீதியாக சென்னை அணியை பல்வேறு போட்டிகளில் தோனி வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில், நேற்று போட்டி முடிந்ததும் மைதானத்தில் தோனியும், ரிஷப் பண்ட்க்கும் நீண்ட பேசிக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், தோனி ரிஷப் பண்ட்க்கு ஆலோசனை சொல்வது போல் இருந்தது. அதனை ரிஷப்பும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டிற்கு நல்ல வாய்ப்பு இருக்கின்றது.
இதனிடையே, ரிஷப் பண்ட்க்கு தோனியின் மகள் தமிழ் கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், தோனியின் மகள் ஜிவா அழகான கொஞ்சும் மழலை மொழியில் ‘அ..ஆ.. இ..ஈ’ என ரிஷப் பண்ட்க்கு சொல்லிக் கொடுக்கிறார். அவரும் அதனை அப்படியே திருப்பிச் சொல்கிறார்.
இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குழந்தை ஜிவா தமிழில் சில சொற்களை பேசும் வீடியோக்கள் இந்த ஐபிஎல் தொடரில் அவ்வவ்போது வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.