திறமை இருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாத ஐந்து முக்கிய வீரர்கள் !!

ஒவ்வொரு வருடமும் கோலகலமாக நடத்தப்படும் ஐபிஎல் டி.20 தொடர் இந்த வருடம் பல்வேறு சிக்கல்களையும், பிரச்சனைகளையும் கடந்து ஒரு வழியாக நடைபெற்று முடிந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறவே, ஐபிஎல் தொடரின் மற்றொரு ஜாம்பவனான மும்பை இந்தியன்ஸ் அணியோ அசால்டாக கோப்பையை தட்டி தூக்கி சாம்பியன் பட்டம் வென்றது.

வழக்கத்திற்கு மாறாக இந்த தொடரில் இளம் வீரர்கள் பலருக்கு ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு வாய்ப்பு வழங்கினாலும், கடந்த தொடர்களில் அபாரமாக விளையாடிய சீனியர் வீரர்கள் பலர் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் தவித்தனர்.

அப்படி, ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காத ஐந்து வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

5 – கிரிஸ் லின்;

கடந்த தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய கிரிஸ் லின்னை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரராக விளையாடிய டிகாக் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியதால் கடைசி வரை கிரிஸ் லின்னிற்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

4 – பார்த்தீவ் பட்டேல்;

கடந்த தொடர்களில் பெங்களூர் அணிக்காக அபாரமாக விளையாடி கொடுத்த விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலுக்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. துவக்க வீரராக களமிறங்கிய தேவ்தட் படிக்கல் ஒவ்வொரு போட்டியிலும் மாஸ் காட்டியதால் பார்த்தீவ் பட்டேல்லின் தேவையே பெங்களூர் அணிக்கு ஏற்படவில்லை.

3 – பவன் நேகி ;

பெங்களூர் அனியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த பவன் நேகியும் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. வாசிங்டன் சுந்தர், சாஹல் போன்ற வீரர்களே தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததால் பவன் நேகிக்கு கடைசி வரை வாய்ப்பே கிடைக்கவில்லை.

2- மிட்செல் மெக்லெங்கன்;

கடந்த தொடர்களில் எதிரணிகளை மிரளவிட்ட மும்பை அணியின் மிட்செல் மெக்லெங்கனுக்கும் இந்த தொடரில் வாய்ப்பே கிடைக்கவில்லை. டிரண்ட் பவுல்ட் மற்றும் பும்ராஹ்வே மாஸ் காட்டியதால் மெக்லெங்கனின் தேவை மும்பை அணிக்கு ஏற்படவே இல்லை.

1 – மணன் வோஹ்ரா;

பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது எதிரணிகளை மிரளவிட்ட அதிரடி வீரர் மனன் வோஹ்ராவை கடந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவருக்கும் இந்த தொடரில் வாய்பே கிடைக்கவில்லை.

Mohamed:

This website uses cookies.