மும்பை அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்தவுடன் சுரேஷ் ரெய்னாவை மறைமுகமாக தாக்கி பேசினாரா தோனி ரசிகர்கள் அதிர்ச்சி!!
நேற்று மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்ஆணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி முடிந்த பின்னர், சுரேஷ் ரெய்னாவை மறைமுகமாக தாக்கிப் பேசி இதுபோன்று பேட்டி கொடுத்தார்தோனி. இந்த பேட்டியை தற்போது ரசிகர்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நேற்று ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.
பதிமூன்றாவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி என்பதால் விறுவிறுப்பாக சென்றது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர்களின் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் சவுரப் திவாரி 42 ரன்களும், டீகாக் 33 ரன்களும் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டுப்லஸ்ஸிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் பாட்னர்சிப் வைத்து 115 ரன்கள் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் எளிதாக போட்டியை முடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொடுத்தனர். போட்டி முடிந்த பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னாவை மறைமுகமாக சீண்டி இருக்கிறார் என்பது போல் தெரிகிறது.
அவர் கூறுகையில் “ஐபிஎல் தொடரை நடத்த பாடுபட்ட அனைவருக்கும் நன்றி குறிப்பாக பின்னாலிருந்து வேலை செய்பவர்கள் தான் இதற்கு முக்கிய காரணம் தொடர் நடக்கக்கூடாது என்று நூறு காரணங்கள் இருந்தாலும், இந்த ஐபிஎல் தொடரை நடத்தியே தீரவேண்டும் என்று வேலை செய்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். கிரிக்கெட் வீரர்கள் வெகு எளிதில் இதனை விமர்சனம் செய்து விட்டு சென்று விடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற ஒரு வசதியை இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஏற்படுத்துவது மிகவும் சிரமமான விஷயம் ஆகும் என்று பேசியிருக்கிறார். குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் என்று பேசியது அவர் சுரேஷ் ரெய்னாவை தான் என்று சிஎஸ்கே ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.