தேவ்தத் படிக்கல் என்னை கவர்ந்துவிட்டார்! ப்ரெட் லீ புகழாரம்!

நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று விட்டது. இது அந்த அணிக்கு ஐந்தாவது கோப்பை ஆகும். ஆனால் ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட தற்கான நோக்கம் தற்போதுதான் நிறைவேறி கொண்டிருப்பதாக பல வீரர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆம் இந்த வருட ஐபிஎல் தொடரில் தான் எப்போதும் இல்லாத வகையில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

ஜஸ்பிரீத் பும்ரா, ககிசோ ரபாடா, கல் ராகுல், ஷிகர் தவான், பென் ஸ்டோக்ஸ், மற்றும் பாட் கம்மின்ஸ்  போன்ற சர்வதேச வீரர்கள் அவர்களது தகுதிக்கு ஏற்ப  விளையாடி  தங்களது மாண்பை காத்துக் கொண்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பல இளம் வீரர்கள் இந்த வருட ஐபிஎல் தொடரில் தங்களது பெயர் தெரியும் வண்ணம் ஆடி இருக்கின்றனர். 

தேவதத் பாடிக்கல், திவதியா, சஞ்சு சாம்சன் இஷன் கிஷன் வாஷிங்டன் சுந்தர் தங்கராசு நடராஜன் போன்ற பல இளம் வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி உலகத்தை தங்கள் பக்கம் திருப்ப வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வீரர்கள் அனைவரும் சேர்த்து இந்த வருடம் ஒரே ஒரு இந்திய வீரர் தான் தன்னை எடுத்ததாக தெரிவித்திருக்கிறார் பிரட் லீ..

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ள பதிவில்… இந்த வருட ஐபிஎல் தொடர் நம்ப முடியாத வகையிலும் வியக்கத்தக்க வகையில் இருந்தது. ரசிகர்கள் இல்லாமல் விளையாடியது வருத்தம்தான். ஆனால் என்னை பொறுத்த வரையில் இந்த வருடத்தில் இந்தியாவின் இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து விட்டார்கள். தேவதத் பாடிக்கல், திவதியா இவர்களைப் போன்ற வீரர்கள்தான் வரவேண்டும். டெல்லி அணி மிகச் சிறப்பாக விளையாடியது. வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டையை கிளப்பி விட்டனர் என்று தெரிவித்திருக்கிறார் பிரெட் லீ.

தேவதத் பாடிக்கல் கர்நாடகாவைச் சேர்ந்த இளம் வீரர் ஆவார் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடியதன் மூலம் பெங்களூர் அணிக்காக தேர்வானார் இந்த வருட ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் 15 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.