சேன் வாட்சனுக்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும், இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் போராடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை கொடுக்கும், சென்னையுடன் சேர்ந்து கொல்கத்தா அணியும் வெளியேறும் நிலை ஏற்படும்.

பிளே-ஆஃப்ஸ் சுற்று தகுதியை இழந்த பின்னர் அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து 12-வது போட்டியில் ஆர்சிபியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் சென்னை பந்து வீசியபோது இதுவரை பவர்பிளேயில் மட்டுமே தீபக் சாஹர் மற்றும் சாம் கர்ரனை பயன்படுத்தி வந்த டோனி இந்த முறை தனது யுக்தியை மாற்றி தலா இரண்டு ஓவர்களுடன் நிறுத்திக் கொண்டு டெத் ஓவரில் பயன்படுத்தினார். இதற்கு இறுதியில் நல்ல ரிசல்ட் கிடைத்தது.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றதாலும், பெரும்பாலான இளம் வீரர்கள் அனைவரும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு விட்டதாலும் சென்னை அணி எந்த மாற்றமும் இல்லாமலே இன்றைய போட்டியை சந்திக்கும் என தெரிகிறது.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ருத்துராஜ் கெய்க்வாட், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, தோனி, ஜெகதீசன், ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், மிட்செல் சாட்னர், ஷர்துல் தாகூர்/ தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், மோனு குமார்.

Mohamed:

This website uses cookies.