முரளி விஜய், பியூஸ் சாவ்லா நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை அணி இது தான் !!

முரளி விஜய், பியூஸ் சாவ்லா நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை அணி இது தான்

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

தொடர்ந்து இரண்டு படுதோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றாவது வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

துவக்க வீரர்கள் (சேன் வாட்சன், டூபிளசிஸ்)

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முரளி விஜய்க்கு நிச்சயம் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது. முரளி விஜய் அணியில் இருந்து நீக்கப்பட்டால் சென்னை அணியின் துவக்க வீரராக சேன் வாட்சனும், டூபிளசிஸும் களமிறங்குவார்கள் என தெரிகிறது. சேன் வாட்சனும் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து தோனி வாட்சனுக்கு இன்னும் சில வாய்ப்புகள் கொடுப்பார் என்றே தெரிகிறது.

மிடில் ஆர்டர் (அம்பத்தி ராயூடு, ருத்துராஜ் கெய்க்வாட், தோனி)

காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத அம்பத்தி ராயூடு இன்றைய போட்டியில் ரீ எண்ட்ரீ கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்பத்தி ராயூடு வந்துவிட்டால் சென்னை அணியில் நிலவி வரும் பேட்டிங் பிரச்சனை ஓரளவிற்கு சரியாகும் என்றே கருதப்படுகிறது. ஆனால் அதேவேளையில் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கும் ருத்துராஜ் கெய்க்வாட் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. இன்றைய போட்டியிலாவது அவர் ஓரளவிற்கு சென்னை அணிக்கு கை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

ஆல் ரவுண்டர்கள் (டூவைன் பிராவோ, ஜடேஜா, கேதர் ஜாதவ், சாம் கர்ரான்)

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் கேதர் ஜாதவ் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு இன்றைய போட்டியிலும் மறுக்கப்படாது என்றே தெரிகிறது. அதே வேளையில் காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத நட்சத்திர வீரர் டூவைன் பிராவோ இன்றைய போட்டியில் எண்ட்ரீ கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

பந்துவீச்சாளர்கள் (கரண் சர்மா, தீபக் சாஹர்)

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பியூஸ் சாவ்லாவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. அவருக்கு பதிலாக கரண் சர்மாவை சென்னை அணி களமிறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளராக வழக்கம் போல தீபக் சாஹரே விளையாடுவார்.

Mohamed:

This website uses cookies.