பிராவோவிற்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !!

பிராவோவிற்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான்

ஐ.பி.எல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு துபாயில் துவங்கியது. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தொடரின் நான்காவது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்தநிலையில், இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்றே கருதப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான சென்னை அணியில் இடம்பிடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் சொதப்பி இருந்தாலும், முரளி விஜய்க்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது. மற்றொரு துவக்க வீரராக வழக்கம் போல் சேன் வாட்சனே இடம்பிடிப்பார்.

அதே போல் மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயூடு, டூபிளசிஸ் ஆகியோரும் ஆல் ரவுண்டர்களாக கேதர் ஜாதவ், ஜடேஜா மற்றும் சாம் கார்ரான் ஆகியோருமே இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது. டூவைன் பிராவோ இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது.

இன்றைய போட்டிக்கான உத்தேச சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சேன் வாட்சன், முரளி விஜய், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, கேதர் ஜாதவ், தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், பியூஸ் சாவ்லா, தீபக் சாஹர், லுங்கி நிகிடி.

Mohamed:

This website uses cookies.