பியூஸ் சாவ்லா அதிரடி நீக்கம் ; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா !!

பியூஸ் சாவ்லா அதிரடி நீக்கம் ; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியிலும்  இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்க உள்ளது. சீனியர் வீரர் பியூஸ் சாவ்லா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கரண் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ;

சேன் வாட்சன், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், கரன் சர்மா, தீபக் சாஹர்.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;

சுப்மன் கில், சுணில் நரைன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன்,  ராகுல் திரிபாதி, ஆண்ட்ரியூ ரசல், பேட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி, சிவம் மாவி.

 

Mohamed:

This website uses cookies.