சென்னையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஹைதராபாத் அணியின் 11 வீரர்கள் இவர்கள் தான் !!

சென்னையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஹைதராபாத் அணியின் 11 வீரர்கள் இவர்கள் தான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இரு அணிகளுமே இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுமே 2வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. துபாயில் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில், பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியிலும் ஹைதராபாத் அணி எந்த மாற்றமும் இல்லாமலே களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

துவக்க வீரர்களாக வழக்கம் போல் ஜானி பாரிஸ்டோ மற்றும் டேவிட் வானரும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே மற்றும் ப்ரியம் கார்க், அப்து சமாத் போன்ற வீரர்களுக்கே இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரசீத் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், கலீல் அஹமது ஆகியோருக்கு இன்றைய போட்டிக்கான அணியிலும் வாய்ப்பு மறுக்கப்படாது.

இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், அப்துல் சமாத், அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், கலீல் அகமது.

Mohamed:

This website uses cookies.