ஸ்ரேயஸ் ஐயர் விளையாடுவாரா..? சென்னையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் டெல்லி படை இது தான் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் டி.20 தொடரில் இரவு நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6 போட்டிகளில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பொறுத்தவரையில், கடந்த போட்டியில் காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயர் விளையாடுவாரா இல்லையா என்பது தொடர்ந்து சந்தேகமாகவே இருந்து வருகிறது. அதே போல் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத ரிஷப் பண்ட் எப்பொழுது அணிக்கு திரும்புவார் என்பது குறித்தான அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஒருவேளை ஸ்ரேயஸ் ஐயர் இன்றைய போட்டியில் விளையாடாவிட்டால் கடந்த போட்டியை போல இன்றைய போட்டியையும் ஷிகர் தவானே வழிநடத்துவார் என தெரிகிறது. ரிஷப் பண்ட் விளையாடாவிட்டால் இன்றைய போட்டியிலும் அலெக்ஸ் கேரியே விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

இதுதவிர இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஜிக்னியா ரஹானே, ரவிச்சந்திர அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், காகிசோ ரபாடா, அன்ரிக் நார்ட்ஜே.

Mohamed:

This website uses cookies.