தட்டுதடுமாறி 184 ரன்கள் குவித்த டெல்லி அணி; ராஜஸ்தானுக்கு சவாலான இலக்கு !!

தட்டுதடுமாறி 184 ரன்கள் குவித்த டெல்லி அணி; ராஜஸ்தானுக்கு சவாலான இலக்கு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

துபாயின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீர்ரர்களான ப்ரித்வி ஷா 19 ரன்களிலும், ஷிகர் தவான் 5 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததனர்.

இதன்பின் வந்த ஸ்ரேயஸ் ஐயர் 22 ரன்களிலும், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 79 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணியின் முதல் நான்கு விக்கெட்டை இழந்து திணறியது.

முதல் நான்கு வீரர்கள் சொதப்பினாலும், ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் 39 ரன்களும், சிம்ரன் ஹெய்ட்மர் 24 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 184 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். திவாட்டியா, கார்த்திக் தியாகி மற்றும் ஆண்ட்ரியூ டை தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.