கெய்லுக்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணி இது தான் !!

கெய்லுக்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணி இது தான்

ஐ.பி.எல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் துபாயில் நேற்று துவங்கியது.

ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு துவங்கியுள்ள இந்த தொடரில் நேற்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய நிலையில், இரண்டாவது போட்டியான இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

புதிதாக கேப்டன் அவதாரம் எடுத்துள்ள கே.எல் ராகுல் இந்த தொடரை வெற்றியுடன் துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கே.எல் ராகுல், கிரிஸ் கெய்லும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் மிடில் ஆர்டரில் மாயன்க் அகர்வால், கிளன் மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரன் மற்றும் மந்தீப் சர்மா ஆகியோர் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து வீச்சாளராக கிருஷ்ணப்பா கவுதமும், வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி, ஷெல்டன் கார்டல் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இன்றைய போட்டிக்கான உத்தேச பஞ்சாப் அணி;

கிரிஸ் கெய்ல், கே.எல் ராகுல் (கேப்டன்), மாயன்க் அகர்வால், கிளன் மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரன், மந்தீப் சர்மா, கிருஷ்ணப்பா கவுதம், முகமது ஷமி, ஷெல்டன் கார்டல், முருகன் அஸ்வின்.

Mohamed:

This website uses cookies.