இம்ரான் தாஹிருக்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !!

ஐபிஎல் டி.20 தொடரின் இன்று இரவு நடைபெறும் 34வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியிலும் வெற்றிக்காக கடுமையாக பாடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் அதே அணியை வைத்து தான் இன்றைய போட்டியிலும் களம் காண தோனி முடிவு செய்திருப்பார் என்றே தெரிகிறது. ஒருவேளை தோனி மாற்றம் செய்ய விரும்பும் பட்சத்தில் இம்ரான் தாஹிருக்கு இன்றைய போட்டியில் இடம் கிடைக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

துவக்க வீரர்கள் ( சாம் கர்ரான், டூபிளசிஸ்)

கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி மாஸ் காட்டிய சாம் கர்ரானே இன்றைய போட்டியிலும் துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என தெரிகிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் சரியாக செயல்படாத டூபிளசிஸ் இன்றைய போட்டியிலாவது சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

மிடில் ஆர்டர் ( சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, தோனி)

சாம் கர்ரான் துவக்க வீரராக களமிறங்கினால், கடந்த போட்டியை போல் சேன் வாட்சன் இன்றைய போட்டியிலும் மூன்றாவது விக்கெட்டுக்கே களமிறங்குவார். அம்பத்தி ராயூடு மற்றும் தோனி தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கும் பட்சத்தில் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரும் பலமாக இருக்கும்.

ஆல் ரவுண்டர்கள் (ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ)

ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து தனது பங்களிப்பை சரியாகவே செய்து வருகிறார். மற்றொரு ஆல் ரவுண்டரான பிராவோ, பந்துவீச்சில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டாலும், இதுவரை ஒரு போட்டியில் கூட சரியாக பேட்டிங் செய்யவில்லை, அவருக்கான வாய்ப்பும் அமையவில்லை. இன்றைய போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் பிராவோ தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கும் பட்சத்தில் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதல் பலமே.

பந்துவீச்சாளர்கள் (கர்ன் சர்மா, பியூஸ் சாவ்லா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்)

கடந்த போட்டியில் தனது நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்திய ஷர்துல் தாகூர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். அதே போல் பியூஸ் சாவ்லா, கரன் சர்மா மற்றும் தீபக் சாஹரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் அது சென்னை அணிக்கு கூடுதல் பலமே.

Mohamed:

This website uses cookies.