ஐபிஎல் டி.20 தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
துபாயின் ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2-வது முறையாக எதிர்கொள்கிறது.
துபாயில் ஏற்கனவே நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 44 ரன்னில் தோல்வியடைந்தாலும், கடைசியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி சிஎஸ்கே-வுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
7-வது போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த பிறகு ஐதராபாத் அணிக்கெதிராக பல்வேறு மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டார் எம்எஸ் தோனி. ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டியின் சென்னை அணியின் அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று அசத்தியது.
எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடும் என்றே தெரிகிறது.
அனுபவ வீரர்கள் அதிகமானவர்கள் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அப்படியே நேர் எதிராண அணி என சொல்லப்படும் அளவிற்கு அதிகமான இளம் வீரர்கள் கொண்ட அணியாக இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே ஒவ்வொரு போட்டியிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மாஸ் காட்டி வருகிறது.
ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், ரகானே, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் உள்ளனர். ரகானே இரண்டு போட்டிகளில் ஜொலிக்கவில்லை. எப்படியும் 160 ரன்களை தாண்டும் திறனையை பெற்றுள்ளது. ஷ்ரேயாஸ் அய்யருக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டது, ஒருவேளை களம் இறங்காவிடில் அது டெல்லிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளின், பலம், பலவீனம் முந்தைய போட்டி முடிவுகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையே ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.