புதிய சாதனை படைக்க காத்திருக்கம் தல தோனி !!

புதிய சாதனை படைக்க காத்திருக்கம் தல தோனி

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய மைல்கல் ஒன்றை எட்ட உள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த சென்னை அணியின் இன்றைய போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டியின் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

2008-ல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் டோனி விளையாடி வருகிறார். இவருடன் இணைந்து ரெய்னாவும் விளையாடி வருகிறார். இந்த சீசனில் இருந்து சொந்த வேலை காரணமாக சுரேஷ் ரெய்னா வெளியேறியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் 192 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுதன் ஐபிஎல்-லில் ஒரு வீரர்கள் விளையாடிய அதிகப்பட்ச போட்டியாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது போட்டியில் விளையாடியபோது கேப்டன் எம்எஸ் டோனி 192 போட்டிகளில் விளையாடி சமன் செய்திருந்தார்.

இன்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டம் மூலம் 193 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.

Mohamed:

This website uses cookies.