சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கிடையேயான ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற போகிறது இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இரண்டு அணிகளும் இந்த முறை புதிதாக பிளே-ஆப் சுற்றில் இணைந்திருக்கின்றன இதற்கு முன்னதாக பெங்களூர் அணி நான்கு மாத இறுதிப் போட்டிக்குச் சென்று ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.
இந்த அணிக்கு வழக்கம்போல் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஜோஷ் பிலிப் இருவருமே நன்றாக ஆடிக் கொண்டிருக்கின்றனர் படிக்கள் தற்போது வரை 14 போட்டிகளில் ஆடி 472 ரன்கள் அடித்து இருக்கிறார், இதில் ஐந்து அரை சதங்களும் அடங்கும். மூன்றாவதாக விராட் கோலி. இவரைப் பொருத்தவரையில் 14 போட்டிகளில் ஆடி 460 ரன்கள் அடித்து இருக்கிறார்.
இது இவரது சராசரி தொடராக அமைந்துவிட்டது. அதிரடியாக விளையாட அடுத்து ஏபி டிவிலியர்ஸ் வருகிறார். இவர் 14 போட்டிகளில் விளையாடி 398 ரன்கள் அடித்து இருக்கிறார்.
ஆல்-ரவுண்டராக ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களம் இறங்குகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக இசுரு உதான, முகமது சிராஜ், நவதீப் சைனி ஆகியோர் இறங்குகிறார்கள். சுழற்பந்துவீச்சாளர்கள் ஆக சாகல் மற்றும் சபாஷ் அகமது ஆகியோர் அந்த அணிக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஜோஷ் பிலிப், தேவதட் பாடிக்கல், விராட் கோஹ்லி (கே), ஏபி டிவில்லியர்ஸ் (கீ), குர்கீரத் சிங் மான், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், இசுரு உதனா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்