ஐபிஎல் டி.20 தொடரின் எலிமினேட்டர் போட்டியான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் டி.20 தொடரின் எலிமினேட்டர் போட்டியான இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், நான்காவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
கடந்த இரண்டு போட்டிகளில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சஹா காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை, அவருக்கு பதிலாக ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் காயம் காரணமாக கிரிஸ் மோரிஸ் விளையாடவில்லை, அவருக்கு பதிலாக மொய்ன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் பிலிப்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆரோன் பின்ச் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி;
ஆரோன் பின்ச், தேவ்தட் படிக்கல், விராட் கோஹ்லி (கேப்டன்), டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), மொய்ன் அலி, வாசிங்டன் சுந்தர், சிவம் துபே, நவ்தீப் சைனி, ஆடம் ஜாம்பா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;
டேவிட் வார்னர் (கேப்டன்), ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கர்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரசீத் கான், சபாஷ் நதீம், சந்தீப் சர்மா, நடராஜன்.