கொல்கத்தா வீரர் ஆண்ட்ரூ ரசலுக்கு பந்து வீச கூடிய வல்லமை படைத்த ஒரே ஒரு பந்து வீச்சாளர் இவர்தான் கௌதம் கம்பீர் சரியான கணிப்பு!!
ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்களுக்கு பந்து வீசுவது என்பது மிகப்பெரும் விஷப்பரீட்சை தான். மதில் மேல் பூனை போல் எந்த பந்து வீசுவது என்றும் எந்த ஷாட் அடிப்பது என்றும் அவருக்கும் தெரியாது பந்துவீச்சாளர்களுக்கும் தெரியாது. ஆனால் அடித்துவிடுவார் அந்த அளவுக்கு அதிரடியாக ஆடக்கூடியவர்.
இப்படித்தான் பல பந்துவீச்சாளர்கள் அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐபிஎல் தொடரின் அனைத்து பந்துவீச்சாளர்களை பாரபட்சமின்றி அடித்து விளாசுவதில் இவரது பங்கு அதிகம். கடந்த சில வருடங்களாக கொல்கத்தா அணியை ஒற்றை ஆளாக அதிரடியாக ஆடி வெற்றி பெற வைத்துக்கொண்டிருக்கிறார்.
Photo by: Ron Gaunt /SPORTZPICS for BCCI
கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 510 ரன்கள் விளாசி இருக்கிறார். இத்தனைக்கும் ஏழாவது வீரராக தான் களமிறங்குவார் ஆனாலும் சராசரி 56. 66 என இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு 318 ரன்கள் அடித்திருந்தார். இதன் ஸ்டிரைக் ரேட் 185. இப்படித்தான் அடித்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறார். அதிலும் கடந்த நான்கு வருடங்களாக இவரது ஆட்டம் உச்சத்திற்கு சென்றுவிட்டது.
இந்நிலையில் இந்த வீரரை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக வழிநடத்தியவர் கவுதம் காம்பீர். தற்போது ஆண்ட்ரூ ரசலுக்கு யார் பந்து வீச முடியும் எனவும், யாரால் பந்து வீசி அவரை விக்கெட் வீழ்த்த முடியும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில் “ஒன்று அல்லது இரண்டு பந்துவீச்சாளர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் ஆண்ட்ரூ ரசலுக்கு பந்து வீச முடியும்.அதற்கு மேல் யாராலும் பந்து வீச முடியாது. ஜஸ்பிரித் பும்ரா வை போன்ற பந்துவீச்சாளர்கள் தான் சரியான வீரர். இவரால்தான் ஆண்ட்ரூ ரசல்லின் விக்கெட்டை வீழ்த்த முடியும்” என்று தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.