இந்திய அணிக்கு அடுத்த இளம் வீரர் கிடைத்துவிட்டார் சுனில் கவாஸ்கர் புகழாரம்
முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கொல்கத்தா அணியின் இளம் துவக்க வீரர் சுப்மன் கில் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார் கொல்கத்தா அணிக்காக கடந்த மூன்று வருடங்களாக அவர் விளையாடி வருகிறார் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அதிரடியாக ரன் குவித்து ஐபிஎல் தொடரில் தனது இடத்தை பிடித்தார். முதல் இரண்டு தொடர்களில் கொல்கத்தா அணிக்கு இவரால் பெரிதாக பங்களிக்க முடியவில்லை
அதன் பின்னர் தினேஷ் கார்த்திக் இந்த வருடம் துவக்க வீரராக இவரை மாற்றினார் இந்த வருட ஐபிஎல் தொடரில் மட்டும் 440 ரன்கள் எடுத்து இருக்கிறார் மூன்று அரை சதங்களும் அடித்திருக்கிறார் சுப்மன் கீழ் ஒவ்வொரு வருடமும் உள்ளூர் போட்டிகளில் ஐபிஎல் தொடரிலும் புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டு இருக்கிறார் இவர் இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடிவிட்டார்
இந்நிலையில் இந்த இளம் வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…
அவரது ஆட்டம் என்னை ரசிக்க வைக்கிறது இதுபோன்ற ஷாட் ஆடும் ஒரு வீரன் அதீத திறமை வாய்ந்தவராக இருப்பார் இதன் காரணமாகத்தான் இவர் இந்தியாவின் ஒரு சிறப்பான இளம் திறமை காரர் என்று கூறுவேன் அவரிடம் டெக்னிக் இருக்கிறது பந்து அதிகம் குதித்து வந்தாலும் அவரால் ஆட முடியும், பந்து இலகுவாக வழுக்கிக்கொண்டு வந்தாலும் அவரால் ஆட முடியும்
எப்போதும் இதேபோல் எளிதாகத்தான் ஆடிக் கொண்டிருக்கிறார் ஒரு தரம் வாய்ந்த வீரரை பார்க்கும்போது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்போம் அப்படித்தான் சுப்மன் கில் இருக்கிறார் இவர் தான் இந்தியாவின் அடுத்த இளம் வீரர் என்று தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்