அந்த பையனுக்கு ஏண்டா இடம் கொடுக்கல; கடுப்பான சேன் வார்னே !!

அந்த பையனுக்கு ஏண்டா இடம் கொடுக்கல; கடுப்பான சேன் வார்னே

இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சனுக்கான இடம் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் ஜாம்பவான் சேன் வார்னே தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் துபாயில் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவு இந்த தொடருக்கும் கிடைத்துள்ளது.

மற்ற தொடர்களை விட இந்த தொடரில் அனைத்து அணிகளும், சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இளம் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணியின் மாயன்க் அகர்வால், கொல்கத்தா அணியின் சுப்மன் கில், ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இந்த தொடரின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்று வருகின்றனர். இளம் வீரர்களின் சிறப்பான விளையாட்டை உன்னிப்பாக கவனித்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சேன் வார்னே, இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கான இடம் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேன் வார்னே கூறுகையில், “சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரை இந்திய அணியில் 3 வடிவிலான போட்டிகளிலும் சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்ட ஸ்டைல் அபாரமாக இருக்கிறது. அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.