நடுவருக்கு எதிராக ஐபிஎல் நிர்வாகத்தில் புதிய வழக்கு போட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!!

நடுவருக்கு எதிராக ஐபிஎல் நிர்வாகத்தில் புதிய வழக்கு போட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!!

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி 20-ஆம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.  முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்கம் முதலே சொதப்பினாலும், துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடியதன் காரணமாக இறுதி ஓவரில் சென்று வெற்றி வாய்ப்பை நழுவ விட்டு சூப்பர் வரை சென்றது. குறிப்பாக 19-வது ஓவரை ககிசோ ரபடா வீசினார். அப்போது மயாங்க் அகர்வால் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் ஆடிக் கொண்டிருந்தனர்.

மயங்க் அகர்வால் ஒரு பந்தை அடித்து விட்டு ஓடினார், ஓடும்போது  கோட்டைத் தொட்டு விட்டு வரும்போது அவர் சரியாக தொடவில்லை என்று இரண்டு பதிலாக ஒரு ரன் என்று கொடுத்தார் லெக் அம்பயர்  நித்தின் மேனன். இறுதியில் அந்த ஓவரில் 12 ரன்கள் தான் எடுக்கப்பட்டது. ஒருவேளை 13 அணிகள் எடுக்கப்பட்டிருந்தால், அடுத்த பந்தில் மிக எளிதாக அந்த அணி வென்று இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஏனெனில் ஒரு ரன் இழந்ததால் தான் சூப்பர் ஓவரை வரை சென்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோற்றது. இதன் காரணமாக பஞ்சாப் அணியின் நிர்வாகம் உடனடியாக அந்த நபர்கள் மீது பிசிசி நிர்வாகத்தில் விசாரணை செய்யுமாறு வழக்குத் தொடுத்திருக்கிறது.

 

Mohamed:

This website uses cookies.