கெய்லுக்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியின் ஆடும் லெவன் இதோ
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்றுள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியில் களம் காண உள்ளதால் இன்றைய போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
துபாயின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
முதல் போட்டியில் தோல்வியடைந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டிக்கான அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியிலும் விளையாடுவார்கள் என தெரிகிறது.
இதன் காரணமாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிரிஸ் கெய்லுக்கு இன்றைய போட்டியிலும் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது. துவக்க வீரர்களாக வழக்கம் போல் கே.எல் ராகுல் மற்றும் மாயன்க் அகர்வால் ஆகியோரே களமிறங்குவார்கள்.
அதே போல் பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக நிக்கோலஸ் பூரான், கருண் நாயர் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோருக்கே இன்றைய போட்டியிலும் இடம் கிடைக்கும் என தெரிகிறது. அதே போல் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜிம்மி நீஷம் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோருமே இன்றைய போட்டியில் களமிறங்குவார்கள்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரவி பிசோனி, முகமது ஷமி மற்றும் ஷெல்டன் கார்டல் ஆகியோருக்கே இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
கே.எல் ராகுல், மாயன்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், கருண் நாயர், கிளன் மேக்ஸ்வெல், ஜிம்மி நீஷம், சர்பராஸ் கான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிசோனி, ஷெல்டன் கார்டல்.