கொல்கத்தா வீரர்களை மிரளவிட்ட பஞ்சாப் பந்துவீச்சாளர்கள்; பஞ்சாப் அணிக்கு எளிய இலக்கு !!

கொல்கத்தா வீரர்களை மிரளவிட்ட பஞ்சாப் பந்துவீச்சாளர்கள்; பஞ்சாப் அணிக்கு எளிய இலக்கு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

துபாய் சார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ராணா டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். இதன் பின் வந்த ராகுல் திரிபாதி 7 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 57 ரன்கள் எடுத்து கொடுத்தார். நீண்ட நேரம் தாக்குபிடித்த இயன் மோர்கன் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இயன் மோர்கனுக்கு பிறகு களமிறங்கிய வீரர் பெர்குசனை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கை ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் நடையை கட்டியதால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பஞ்சாப் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், கிரிஸ் ஜோர்டன் மற்றும் ரவி பிஸ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.