ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய லசித் மலிங்கா! மாற்று வீரர் அறிவிப்பு!
ஐபிஎல் தொடருக்கு தற்போதுவரை சிக்கல் மேல் சிக்கல்களாக வந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடக்கிறது. மேலும், மூன்று மைதானங்களில் மட்டுமே மொத்தம் 60 போட்டியிலும் நடைபெறும். ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும், வீரர்கள் யாரும் கொண்டாடக்கூடாது, உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க வேண்டும், இப்படி பல பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கும் வேளையில் அனைத்து வீரர்களும் கடந்த வாரம் துபாய் சென்றனர்.
அங்கு 12 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். இந்த தனிமைப்படுத்தலின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்குள் கொரோனா வைரஸ் புகுந்தது. 2 வீரர்கள் உட்பட 13 பேர் இந்த வைரஸ் பாதித்தது.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இவருக்கும் பிரச்சனை இருப்பதாக தகவல் வந்தது.
இது குறித்து சில விளக்கங்களை கொடுத்துள்ளார் சுரேஷ் ரெய்னா. அதனைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரின் கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் இருக்கும் மெடிகல் கமிஷன் அதிகாரி ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உருவாகியுள்ளது. இப்படி பிரச்சனையை மேல் பிரச்சினைகளாக வந்து கொண்டிருக்கும் வேளையில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மிகவும் அமைதியாக இருக்கிறார்
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். வெளியேறி விட்டு இந்த வருடம் ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக விளையாட போகவில்லை என்றும் அறிவித்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் குடும்பத்துடன் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார் . இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி மாற்று வீரரை தேர்வு செய்து விட்டது .ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பேட்டின்சன் லசித் மலிங்காவிற்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.