கிரிஸ் லின் இல்லை; மும்பை அணியின் துவக்க வீரர்கள் இவர்கள் தான்; ஜெயவர்த்தனே ஓபன் டாக் !!

கிரிஸ் லின் இல்லை; மும்பை அணியின் துவக்க வீரர்கள் இவர்கள் தான்; ஜெயவர்த்தனே ஓபன் டாக்

இந்த வருட ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்கள் யார் என்பதை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஜெயவர்த்தேனே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு இதுவரை 12 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடரானது இன்று மாலை துவங்க உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தொடர் குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்கள் களமிறங்க போவது யார் யார் என்பதனை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஜெயவர்த்தனே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜெயவர்தனே, கிறிஸ் லின் அருமையான வீரர். அவரை அணியில் பெற்றது மகிழ்ச்சி. ஆனால் ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் கடந்த சீசனில் அருமையாக ஆடினர். இருவரும் அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள். எனவே அந்த ஜோடியை பிரிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் ரோஹித்தும் டி காக்குமே தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்று ஜெயவர்தனே கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர்நைல், பும்ரா, டிரெண்ட் போல்ட், மிட்செல் மெக்லனகன், தவால் குல்கர்னி, ஷ்ரெஃபேன் ரூதர்ஃபோர்டு, கிறிஸ் லின், சவுரப் திவாரி, திக்விஜய் தேஷ்முக், ப்ரின்ஸ் பல்வாண்ட் ராய் சிங், மோசின் கான், ஜெயந்த் யாதவ், ஆதித்ய தரே, அன்மோல்ப்ரீத் சிங், அனுகுல் ராய்.

Mohamed:

This website uses cookies.