உமேஷ் யாதவ் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணி இது தான்
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி இன்றைய போட்டியில் சில மாற்றங்களுடன் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்க வீரர்கள் (ஆரோன் பின்ச், தேவ்தட் படிக்கல்)
துவக்க வீரர்களாக வழக்கம் போல் ஆரோன் பின்ச்சும், தேவ்தட் படிக்கலுமே இன்றைய போட்டியில் களமிறங்குவார்கள் என தெரிகிறது. தனது அதிரடி ஆட்டத்தை இன்னமும் வெளிப்படுத்தாத ஆரோன் பின்ச் இன்றைய போட்டியிலாவது அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
மிடில் ஆர்டர் (விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், சிவம் துபே)
இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியின் மிடில் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. கடந்த போட்டியில் விளையாடிய கோஹ்லி, டிவில்லியர்ஸ் மற்றும் சிவம் துபே ஆகியோரே இன்றைய போட்டியிலும் களமிறங்குவார்கள் என தெரிகிறது. கடந்த இரண்டு போட்டியிலும் பெங்களூர் அணியின் மானம் காத்த அதிரடி வீரர் டிவில்லியர்ஸிஸ் இன்றைய போட்டியில் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என தெரிகிறது.
ஆல் ரவுண்டர்கள் ( வாசிங்டன் சுந்தர், இசுரு உடானா)
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வழக்கம் போல் வாசிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. அதே வேளையில் இன்றைய போட்டிக்கான அணியில் இருந்து ஜோஸ் பிலிப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இலங்கை அணியை சேர்ந்த ஆல் ரவுண்டர் இசுரு உடானாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
பந்துவீச்சாளர்கள் (டேல் ஸ்டைன், சாஹல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ்)
பந்துவீச்சாளர்கள் வரிசையில் வழக்கம் போல் டேல் ஸ்டைன், நவ்தீப் சைனி மற்றும் சாஹலுக்கு இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளையில் கடந்த இரண்டு போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய உமேஷ் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜிற்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.