மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்; முதலில் பேட்டிங் செய்கிறது கோஹ்லி படை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 10வது போட்டியான இன்றைய லீக் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்க உள்ளது. சீனியர் வீரர் சவுரவ் திவாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் இஷான் கிஷான் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதேவேளையில், படுதோல்விகளை சந்தித்து வரும் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் அதிரடி மாற்றத்துடன் களமிறங்க உள்ளது.
ரன்களை வாரி வழங்கிய டேல் ஸ்டைன், உமேஷ் யாதவ் மற்றும் ஜாஸ் பிலிப் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இசுரு உடானா, ஆடம் ஜம்பா மற்றும் குர்கிரீட் ஆகியோர் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணி;
தேவ்தட் படிக்கல், ஆரோன் பின்ச், விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், சிவம் துபே, வாசிங்டன் சுந்தர், இசுரு உடானா, குர்கிரீட் சிங், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;
குவிண்டன் டிகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, கீரன் பொலார்டு, க்ரூணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஜேம்ஸ் பட்டின்சன், டிரண்ட் பவுல்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.