டாஸை இழந்துள்ளார் தோனி; முதலில் பேட்டிங் செய்கிறது ஹைதராபாத் !!

டாஸை இழந்துள்ளார் தோனி; முதலில் பேட்டிங் செய்கிறது ஹைதராபாத்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முரளி விஜய், ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அம்பத்தி ராயூடு, ஷர்துல் தாகூர் மற்றும் டூவைன் பிராவோ ஆகியோர் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளையில் இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, டூபிளசிஸ், கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), டூவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், பியூஸ் சாவ்லா, தீபக் சாஹர்.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பாரிஸ்டோவ், மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், அப்துல் சஹத், அபிஷேக் சர்மா, ப்ரியம் கார்க், ரசீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, நடராஜன்.

Mohamed:

This website uses cookies.