கடைசி நேரத்தில் காட்டடி அடித்த கார்க்; சென்னை அணிக்கு சவாலான இலக்கு !!

கடைசி நேரத்தில் காட்டடி அடித்த கார்க்; சென்னை அணிக்கு சவாலான இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வார்னர் கெத்தாக பேட்டிங்கை தேர்வு செய்திருந்தாலும், போட்டியின் துவக்கத்தில் ஹைதராபாத் அணியில் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை.

ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்களான டேவிட் வார்னர் (28), பாரிஸ்டோ (0), மணிஷ் பாண்டே (29), கேன் வில்லியம்சன் (9) என யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் முதல் 16 ஓவர்களுக்கே 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முக்கிய வீரர்கள் அனைவரும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்துவிட்டதால் ஹைதராபாத் அணி வெறும் 140 ரன்கள் மட்டுமே எடுக்கும் என்றே கணிக்கப்பட்ட நிலையில், கடைசி நான்கு ஓவர்களில் சென்னை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த இளம் வீரர் ப்ரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்கள் குவித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள ஹைதராபாத் அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பியூஸ் சாவ்லா மற்றும் ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.