அதிரடி வீரருக்கு மீண்டும் இடம் இல்லை; முதலில் பேட்டிங் செய்கிறது மும்பை
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரில் இன்றைய நாளுக்கான முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
துபாயின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் கிரிஸ் லின்னிற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியோ எந்த மாற்றமும் இல்லாமல் இன்றைய போட்டியில் களம் காண உள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்க உள்ளது. கடந்த போட்டியில் காயம் அடைந்த புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சித்தார்த் கவூலும், கலீல் அஹமதுக்கு பதிலாக சந்தீப் சர்மாவும் இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;
டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோ , மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ரசீத் கான், சந்தீப் சர்மா, சித்தார்த் கவூல், நடராஜன்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;
குவிண்டன் டிகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், கீரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, ஜேம்ஸ் பட்டின்சன், ராகுல் சாஹர், டிரண்ட் பவுல்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.