பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல் தாகூர்; சென்னை அணிக்கு சவாலான இலக்கு !!

பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல் தாகூர்; சென்னை அணிக்கு சவாலான இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரில் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வழக்கம் போல கே.எல் ராகுலும், மாயன்க் அகர்வாலும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். மயன்க் அகர்வால் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடிய கே.எல் ராகுல் 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மந்தீப் சிங் 27 ரன்களும், நான்காவது விக்கெட்டுக்கு வந்த நிக்கோலஸ் பூரன் 17 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும், கடைசி நேரத்தில் களமிறங்கிய மேக்ஸ்வெல் மற்றும் சர்பராஸ் கானும் அதிரடியாக விளையாட தவறியதால் 200 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

சென்னை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், சாவ்லா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.