அணியில் அதிரடி மாற்றங்கள்; முதலில் பேட்டிங் செய்கிறது பஞ்சாப் !!

அணியில் அதிரடி மாற்றங்கள்; முதலில் பேட்டிங் செய்கிறது பஞ்சாப்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, தொடர்ந்து சொதப்பினாலும் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடனே இன்றைய போட்டியிலும் சென்னை அணி களம் காண உள்ளது.

அதே வேளையில் பஞ்சாப் அணி மூன்று மாற்றங்களுடன் இன்றைய போட்டியில் களம் காண உள்ளது. வருண் நாயர், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மந்தீப் சிங், ஹர்ப்ரீட் ப்ரார் மற்றும் கிரிஸ் ஜோர்டான் ஆகியோர் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல், மாயன்க் அகர்வால், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரன், கிளன் மேக்ஸ்வெல், சர்பராஸ் கான், கிரிஸ் ஜோர்டன், ஹர்ப்ரீட் ப்ரார், ரவி பிஸ்னோய், முகமது ஷமி, ஷெல்டன் கார்டல்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, டூபிளசிஸ், தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், பியூஸ் சாவ்லா, தீபக் சாஹர்.

Mohamed:

This website uses cookies.