களமிறங்கும் கிரிஸ் கெய்ல்; சென்னையுடன் சண்டைக்கு வர காத்திருக்கும் பஞ்சாப் அணி இது தான்
சென்னை அணியுடனான இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
சென்னை அணியை போலவே இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால்.
வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
துவக்க வீரர்கள் (கிரிஸ் கெய்ல், மயன்க் அகர்வால் )
வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் அதிரடி வீரர் கிரிஸ் கெய்லுக்கு பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வாய்ப்பு கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது . கிரிஸ் கெய்ல் ஓருவேளை அணியில் இடம்பெற்று அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது நிச்சயம் சென்னை அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். இதே போல் மற்றொரு துவக்க வீரராக மாயன்க் அகர்வாலே மற்றொரு துவக்க வீரராக களமிறங்குவார்.
மிடில் ஆர்டர் (கே.எல் ராகுல், மந்தீப் சிங், சர்பராஸ் கான், நிக்கோலஸ் பூரன்)
துவக்க வீரராக களமிறங்கி வந்த கே.எல் ராகுல் இன்றைய போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. இதே போல் மந்தீப் சிங், சர்பராஸ் கான் மற்றும் நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்களுக்கு மிடில் ஆர்டரில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. தொடர்ந்து சொதப்பி வரும் கிளன் மேக்ஸ்வெல் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
ஆல் ரவுண்டர் (கிருஷ்ணப்பா கவுதம்)
கடந்த போட்டியில் அதிகமான ரன்களை வாரி வழங்கினாலும் கிருஷ்ணப்பா கவுதமிற்கான வாய்ப்பு இன்றைய போட்டியிலும் மறுக்கப்படாது என்றே தெரிகிறது.
பந்துவீச்சாளர்கள் (ஷெல்டன் கார்டல், முகமது ஷமி, ரவி பிஸ்னோய், முஜிபுர் ரஹ்மான்)
பந்துவீச்சாளர்கள் வரிசையில் வழக்கமான ஷெல்டன் கார்டல், முகமது ஷமி, ரவி பிஸ்னோய் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படாது என்றே தெரிகிறது. அதே வேளையில் தொடர்ந்து சொதப்பி வந்த ஜேம்ஸ் நீஷம் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் முஜிபுர் ரஹ்மானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது.