ரீ எண்ட்ரீ கொடுக்கும் இரண்டு வீரர்கள்; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளுமே ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஷெல்டன் கார்டலுக்கு பதிலாக கிரிஸ் ஜோர்டன் அணியில் இடம்பெற்றுள்ளார். இன்றைய போட்டியிலும் கிரிஸ் கெய்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், சிவம் மாவிக்கு பதிலாக பிரசீத் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;
கே.எல் ராகுல், மாயன் அகர்வால், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரண், சிம்ரன் சிங், கிளன் மேக்ஸ்வெல், முஜிபுர் ரஹ்மான், கிரிஸ் ஜோர்டன், ரவி பிஸ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி; \
ராகுல் திரிபாதி, சுப்மன் கில், நிதிஷ் ராணா, சுனில் நரைன், இயான் மோர்கன், ஆண்ட்ரியூ ரசல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ், கம்லேஷ் நாகர்கோட்டி, பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.