அறிமுக வீரருக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி படை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் டி.20 தொடரின் 30வது போட்டியான இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் விளையாடுகின்றனர்.
அதே வேளையில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்றைய போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துசார் தேஸ்பண்டே என்னும் வீரர் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;
பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் ப்ராக், ராகுல் சாஹர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனாட்கட், காத்திக் தியாகி.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், அஜிக்னியா ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், துசார் தேஸ்பண்டே, காகிசோ ரபாடா, அன்ரிக் நார்ட்ஜே.