கேதர் ஜாதவுக்கு அணியில் இடம் ; முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை படை !!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

துபாய் சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த போட்டியை போல் இன்றைய போட்டியிலும் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பியூஸ் சாவ்லா நீக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வெறுப்பை சம்பாதித்துள்ள கேதர் ஜாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான டெல்லி அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

டூபிளசிஸ், சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், டூவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், கரண் சர்மா.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், அஜிக்னியா ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், துசார் தேஸ்பண்டே, காகிசோ ரபாடா, அன்ரிக் நார்ட்ஜே.

Mohamed:

This website uses cookies.