இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை படை !!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. காயம் காரணமாக பிராவோ விளையாடாததால் அவருக்கு பதிலாக ஹசில்வுட் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய கரண் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பியூஸ் சாவ்லா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த ஜெயதேவ் உனாட்கட் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அன்கித் ராஜ்புட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

டூபிளசிஸ், சாம் கர்ரான், சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், தீபக் சாஹர், பியூஸ் சாவ்லா, ஷர்துல் தாகூர், ஜாஸ் ஹசில்வுட்.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், ஜாஸ் பட்லர், ரியான் ப்ராக், ராகுல் திவாடியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயஸ் கோபால், அன்கித் ராஜ்புட், கார்த்திக் தியாகி.

Mohamed:

This website uses cookies.