பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொலார்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கீரன் பொலார்டு தலைமையிலான மும்ம்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் கீரன் பொலார்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியோ அதிரடி மாற்றங்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. காயம் காரணமாக நவ்தீப் சைனி இன்றைய போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதிலாக ஷிவம் துபே மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சொதப்பி வந்த ஆரோன் பின்ச் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜோஸ் பிலிப்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் ஆல் ரவுண்டர் மொய்ன் அலி நீக்கப்பட்டு அவரக்கு பதிலாக அசுர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;
இஷான் கிஷன், குவிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரன் பொலார்டு (கேப்டன்), க்ரூணல் பாண்டியா, ஜேம்ஸ் பட்டின்சன், ராகுல் சாஹர், டிரண்ட் பவுல்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.
இன்றைய போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி;
தேவ்தட் படிக்கல், ஜோஸ் பிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), விராட் கோஹ்லி (கேப்டன்), டிவில்லியர்ஸ், குர்கிரீட் சிங் மான், ஷிவம் துபே, கிரிஸ் மோரிஸ், வாசிங்டன் சுந்தர், டேல் ஸ்டைன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.