களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர்; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரில் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

வாழ்வா சாவா போட்டியான இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரியூ ரசல் இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதே போல் சிவம் மாவியும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லோகி பெர்குசன் மற்றும் ரின்கு சிங் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;

சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆண்ட்ரியூ ரசல், ஷிவம் மாவி, பேட் கம்மின்ஸ், கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், ஜாஸ் பட்லர், ரியான் ப்ராக், ராகுல் திவாடியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயஸ் கோபல், வருன் ஆரோன், கார்த்திக் தியாகி.

Mohamed:

This website uses cookies.