டாஸை வென்று தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தார் டேவிட் வார்னர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
துபாயின் அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், மற்ற கேப்டன்களை போன்று பந்துவீச்சை தேர்வு செய்யாமல் தில்லாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆல் ரவுண்டர் சேன் மார்ஸிற்கு பதிலாக முகமது நபி இடம்பெற்றுள்ளார். அதே போல் விஜய் சங்கர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு கலீல் அஹமதும், விர்திமான் சஹாவும் இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்றைய போட்டியில் இரண்டு மாற்றத்துடன் களமிறங்க உள்ளது. சந்தீப் மற்றும் நிக்கில் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நாகர்கோட்டி மற்றும் வருண் ஆகியோர் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணி;
டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பாரிஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, ப்ரியம் கார்க், முகமது நபி, விரிதிமான் சஹா, அபிஷேக், ரசீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, நடராஜன்.
இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;
சுனில் நரைன், சுப்மன் கில், தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, இயான் மோர்கன், ஆண்ட்ரியூ ரசல், பேட் கம்மின்ஸ், கம்லேஷ் நாகர்கோட்டி, வருன் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சிவம் மாவி.