ராஜஸ்தான் – பஞ்சாப்; இன்றைய போட்டியில் வெற்றி வாகை சூடப்போவது இந்த அணி தான் !!

ராஜஸ்தான் – பஞ்சாப்; இன்றைய போட்டியில் வெற்றி வாகை சூடப்போவது இந்த அணி தான்

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்றுள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியில் களம் காண உள்ளதால் இன்றைய போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரும், பஞ்சாப் அணி கேப்டனுமான லோகேஷ் ராகுல் பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 69 பந்தில் 132 ரன் எடுத்தார். இந்த சீசனில் செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ஆவார். ராகுலின் அதிரடியை ராஜஸ்தான் இன்று சமாளிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் மட்டுமல்லாமல் மேக்ஸ்வெல், கருன் நாயர், மாயன்க் அகர்வால் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் பஞ்சாப் அணியில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் பஞ்சாப் அணி போதிய பலத்துடனே உள்ளது. முகமது ஷமி, ஷெல்டன் கார்டல், முருகன் அஸ்வின் போன்ற வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குறை எதுவும் சொல்ல முடியாத அளவிற்கு சிறந்த அணியாகவே உள்ளது. பஞ்சாப் அணியில் ராகுல் எப்படி அதிரடி வீரராக இருக்கிறாரோ அதேபோல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆட கூடியவர். அவர் சென்னை அணிக்கு எதிராக 32 பந்தில் 70 ரன்களுக்கு மேல் விளாசினார்.

கேப்டன் ஸ்டீவ் சுமித், டேவிட் மில்லர், ஜாஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேதியா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த பட்லர் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கலாம். அவரது வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாகும்.

இரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10-ல், பஞ்சாப் 9-ல் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளுமே சமபலம் கொண்ட அணிகளாக இருந்தாலும், இரு அணிகளின் பலம், பலவீனம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் கையே ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.